Monday, May 4, 2009

புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது!!!


புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது எனும் அளவுக்கு கூட வாதாடுவார்கள் இந்த புகைக்கு அடிமையானவர்கள். என் நண்பர் ஒருவரை புகையை கட்டுப்படுத்த வைத்துவிடலாம் என்று பல முயற்சிகளின் எடுத்தும் நாங்கள் தான் தோல்வியுறுகிறோம். இந்தப் பதிவு அவருக்கே சமர்ப்பணம்.


புகைக்கு அடிமையாதல் என்றால் என்ன?

ஒருவர் புகைக்கு அடிமையாகி விட்டார் என்றால் அவர் புகைக்க எண்ணும் போது புகைக்கா விட்டால் அவர் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாவார், மனதளவிலும் மற்றும் உடலளவிலும்.

புகைப்பிடித்தல் கெடுதல் தரக்கூடியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அது எவ்வளவு விஷமானது என்றும் அடிமையாக்கதக்கது என்றும் பலர் உணர்வதில்லை.

புகைக்கு அடிமையானவர் ஒருவர் தனது 50-ஆவது வயதில் மரணமடைகிறார் என்றால் அவர் அநேகமாக இன்னும் 10 முதல் 15 வருடங்கள் வரை கூடுதலாக வாழ்திருப்பாராம் இந்தப் புகையை விட்டொழித்திருந்தால் .

புகைக்கு அடிமையானால் மீள முடியாது என்பது வெறும் மாயை, சற்று கடினம் என்று சொல்லலாம். தானாக முயன்றாலன்றி வற்புறுத்தல் வேலைக்கு ஆகாது.

35-50 வயதுக்குள்ளாக அல்லது அதற்கு முன்பாக புகையை விட்டொழித்தால், நுரையீரல் பாதிப்பிலிருந்து 90% வரை தப்பிக்க வழியுண்டு.

ஏன் புகைக்கு அடிமையாகிறார்கள்:

புகையிலையில் உள்ள நிக்கோடின் என்ற வேதியியல் பொருள்தான் அவர்களை அடிமையாக்குகிறது. புகையை வாயின் வழியாக அல்லது மூக்கின் வழியாக(passive smokers பாதிக்கப்படுவது இப்படித்தான்!!!) உள்ளிழுக்கும் பொழுது அல்லது புகையிலையை மெல்லும் போது இந்த நிக்கோடின் நம் ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைகிறது. இந்த நிக்கோடின் நம் மூளைக்கு ஒரு விதமான தூண்டுதலைக் கொடுக்கும். நாம் stress-ஆக இருந்தால் இது அமைதிப்படுத்தியாகவும் வேலை செய்யும். இது நம் ஹார்மோன்களைக் கூட பாதிக்குமாம். நிக்கோடின் நம் மூளையில் பல pleasure centers-களை உருவாக்கும். அது தன் வலுவை இழக்கும் போது புகைப் பிடிக்க ஆர்வம் அதிகரிக்கும். இதுவும் ஒரு விதமான பசி.

ஒருவர் தன் பருவ வயதில் எவ்வளவு சீக்கிரம் புகைப்பிடிக்க ஆரம்பிக்கிறாரோ அவ்வளவு அடிமையாகிறாராம் இந்த பாழாப்போன புகைக்கு.

புகைத்தலினால் வரும் நோய்கள்:

  • இதயம் சம்பந்தமான நோய்கள்
  • பலவிதமான புற்று நோய்கள்
  • நுரையீரல் சம்பந்த்தமான பல நோய்கள்
  • வயிற்றுப்புண்(Ulcer) ஆறுவதை தாமதப்படுத்துகிறது
  • ரத்தக்குழாய்கள் பாதிக்கப் படுவதினால் கால் முடமாகும் வாய்ப்பு
  • தோல் சுருக்கம் (ஐந்து வயது முதுமையாகத் தெரிவார்களாம்.)
  • ஆண் பெண் இன உருப்புகளை பாதிக்கும்.
  • எலும்புகளை சீக்கிரம் வலுவிழக்கச் செய்யும்.
  • பெண்களுக்கு பிரசவம் தொடர்பான பல பிரச்சனைகளைத் தருகிறது.

புகைத்தல் பற்றி ஒரு சலனப்படம்:


புகைத்தலை எப்படி நிறுத்துவது?

நல்ல தளம் கண்டேன். இங்கே சென்று பாருங்கள். எப்படி புகைத்தலை நிறுத்துவது என்று படிப்படியாக விளக்கமாக கூறியிருக்கிறார்கள். நீங்கள் புகைக்கவில்லை என்றாலும் இங்கே போய்ப் பாருங்கள். உங்கள் நண்பர் யாராவது "புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது" எனும் அளவுக்கு வாதாடினால் இந்த தகவல்களை அள்ளி வீசுங்கள். அவருக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.

இந்தப் பதிவு என்னைப் போன்ற பல கோடிக்கணக்கான passive smokers-களுக்கும் சமர்ப்பணம்.

உங்கள் அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல புரட்சிக்கு வித்திடட்டும் இந்தப் பதிவு!!!

10 comments:

Anand said...

உடல் நோன்ஞான் மாதிரி உள்ளவர்கள் புகையை விட்டொழித்தால் சிறிது எடை போட வாய்ப்புள்ளதாம்.

"Smokers on average weigh about 7 pounds less than nonsmokers do, and after stopping they tend to make up the difference and put on this much. This is partly due to eating more and partly to changes in metabolism. Nicotine has a mildly suppressant effect on appetite, especially the desire for sweet-tasting foods. It also increases the metabolic use of energy, which is the consumption of calories not used for physical exertion. The result is a tendency to gain weight after stopping smoking, despite not eating more."

நிகழ்காலத்தில்... said...

அருமையான பதிவு,

வாழ்த்துக்கள்

Anand said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி அறிவே தெய்வம் நண்பா!

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ..........

பிடித்தல் சம்பந்தமாக
எனது பதிவு இங்கே!!

http://pirathipalippu.blogspot.com/2008/11/blog-post_10.html

Anand said...

ஜீவன் நண்பா, மனதைத் தொடும் விசயத்தில் உங்கள் பதிவு கொஞ்சம் வலிமையானது.

Hope said...
This comment has been removed by the author.
Anand said...

நன்றி ரேவதி, புரட்சி ஆரம்பிக்கட்டும் :)

yirus said...

நன்றி
வாழ்த்துக்கள்

http://kumaranpage.blogspot.com/ said...

காதலிக்கும் பெண்களும் சிகரெட்டும் ஒன்றுதான் ! இரண்டுமே உதட்டோடு உறவாடி விட்டு "இதயத்தை " புண்ணாக்கி விடும் . DON'T LOVE DON'T SMOKE...

http://kumaranpage.blogspot.com/ said...

காதலிக்கும் பெண்களும் சிகரெட்டும் ஒன்றுதான் ! இரண்டுமே உதட்டோடு உறவாடி விட்டு "இதயத்தை " புண்ணாக்கி விடும் . DON'T LOVE DON'T SMOKE...