மதுரையிலிருந்து சென்று பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் K.S. கார்த்திக் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ஒரு வியத்தற்குரிய கின்னஸ் உலக ரெக்கார்டை முறியடித்திருக்கிறார். இவர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் B.Tech-ITமுடித்தவர்.
ரெக்கார்டு என்னன்னா... Attaching most wooden clips on face - அதிகமான மரக் கிளிப்புகளை முகத்தில் மாட்டிக் கொள்வது.இந்த ரெக்கார்டை முன்பு வைத்திருந்தவர் லண்டனின் கேரி டர்னெர் (Gary Turner). இப்ப ஒரு இந்தியர் தன்னோட முகத்தில 160 கிளிப்புகளை மாட்டிக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனையை பெங்களூர் press club-ல் gazetted officer Dr.S.ராமராஜா அவர்கள் மற்றும் பல்வேறு பத்திரிக்கைகள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். Link to this news in Times of India.
அவர் தூக்கத்துல என் மேல காலைப் போடுற அளவுக்கு எனக்கு நெருங்கிய நண்பர்னு சொல்லிக்கிறதுல எனக்குக் கூடுதல் பெருமை :)
அவரோட முகம் கிளிப் இல்லாம...
ஆரம்பம்...
முகம் முழுவதும் கிளிப்புகள்...

கிளிப்புகளை அகற்றிய பிறகு...

Hats off Karthick!

