Monday, August 17, 2009

மதுரைக்காரனின் கின்னஸ் உலக ரெக்கார்டு

வணக்கம் நண்பர்களே!

மதுரையிலிருந்து சென்று பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் K.S. கார்த்திக் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ஒரு வியத்தற்குரிய கின்னஸ் உலக ரெக்கார்டை முறியடித்திருக்கிறார். இவர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் B.Tech-ITமுடித்தவர்.

ரெக்கார்டு என்னன்னா... Attaching most wooden clips on face - அதிகமான மரக் கிளிப்புகளை முகத்தில் மாட்டிக் கொள்வது.

இந்த ரெக்கார்டை முன்பு வைத்திருந்தவர் லண்டனின் கேரி டர்னெர் (Gary Turner). இப்ப ஒரு இந்தியர் தன்னோட முகத்தில 160 கிளிப்புகளை மாட்டிக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனையை பெங்களூர் press club-ல் gazetted officer Dr.S.ராமராஜா அவர்கள் மற்றும் பல்வேறு பத்திரிக்கைகள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். Link to this news in Times of India.

அவர் தூக்கத்துல என் மேல காலைப் போடுற அளவுக்கு எனக்கு நெருங்கிய நண்பர்னு சொல்லிக்கிறதுல எனக்குக் கூடுதல் பெருமை :)

அவரோட முகம் கிளிப் இல்லாம...
ஆரம்பம்...

முகம் முழுவதும் கிளிப்புகள்...

கிளிப்புகளை அகற்றிய பிறகு...

Hats off Karthick!

Friday, August 7, 2009

புகை‌ப்பதை ‌நிறு‌த்‌தினால‌் திருமணச் செலவை ஏ‌ற்போ‌ம் என்கிறது அரசு

புகை‌ப்‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்‌தினா‌ல் ‌திருமண‌ச் செலவை ஏ‌ற்க‌த் தயா‌‌ர் எ‌ன்று சவு‌தி அரே‌பிய அரசு ஒரு அ‌திரடி அ‌றி‌வி‌ப்பை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. நம்ம இந்திய அரசு இல்ல :)

அ‌ங்கு எ‌ன்ன பெ‌ண்களா புகை‌ப்‌பிடி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்கா‌தீ‌ர்க‌ள். அ‌ங்கு வரத‌ட்சணை‌க் கொடு‌ப்பது ஆ‌ண்க‌ள். அதனா‌ல்தா‌ன் இ‌ப்படி ஒரு அ‌திரடி முடிவை அ‌றி‌வி‌த்து‌ள்ளது சவு‌தி அரே‌பிய அரசு.



சவுதி அரேபியாவில் புகை‌ப்‌பிடி‌க்கு‌‌ம் ஆண்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. இதனா‌ல் கவலை அடை‌ந்து‌ள்ளது எனவோ அரசுதா‌ன். சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை‌யி‌ல் நா‌ன்‌கி‌ல் ஒரு பகு‌தி‌யின‌ர் அதாவது கா‌ல்வா‌சி‌ப் பே‌ர் புகை பிடிப்பவர்களாக உ‌ள்ளன‌ர்.

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக சவு‌தி அரே‌பிய அரசு ஒரு ச‌ங்க‌த்தையு‌ம் துவ‌க்‌கியு‌ள்ளது. அ‌ந்த ச‌ங்க‌த்‌தி‌ன் மூல‌ம் புகை பிடிப்பதை கை விடுபவ‌ர்களு‌க்கு திருமணச் செலவு முழுவதையும் அரசு அ‌ளி‌க்கு‌ம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகை ‌நிறு‌த்துபவ‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் அரசு ‌திருமண‌ம் செ‌‌ய்து வை‌க்கு‌ம் எ‌ன்று கனவு‌க் கோ‌ட்டை க‌ட்டா‌தீ‌ர்க‌ள். அதாவது, புகை‌ப் ‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்துவதாக முடிவெடு‌க்கு‌ம் ஆ‌ண்க‌ள், இ‌ந்த ச‌ங்க‌த்‌தி‌ல் சே‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அவ‌ர்களது பெய‌ர்க‌ள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்ப‌ட்டு, அவரது ‌திருமணச் செலவு முழுவதையு‌ம் அரசு அ‌ளி‌க்கு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், ஆறுத‌ல் ப‌ரிசாக 20 பேருக்கு வீட்டுக்கு தேவையான மரச்சாமான்கள் இலவசமாக வழங்கப்படும் எ‌ன்று அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ந‌ம்மூ‌ரி‌ல் பெ‌ண்க‌ள் வரத‌ட்சணை‌க் கொடு‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வா‌ர்க‌ள். ஆனா‌ல‌் சவுதி அரேபியாவில் திருமணத்துக்கான செலவு முழுவதும் மணமகனின் பொறுப்புதா‌ன். திருமண ‌நி‌க‌ழ்‌ச்‌சி, வரத‌ட்சணை, வீடு என்று எல்லாமே மணமகன்தா‌ன் ஏ‌ற்பாடு செ‌ய்ய வே‌ண்டு‌ம். இதனாலேயே பல ஆ‌ண்க‌ளு‌க்கு அ‌ங்கு வயதான‌பிறகு ‌திருமண‌ம் நட‌க்‌கிறது.

ச‌ரி அரசு செல‌வி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌‌ண்ட ‌பிறகு புகை‌ப்‌பிடி‌த்தா‌ல் எ‌ன்ன செ‌ய்வா‌ர்க‌ள். ‌விவாகர‌த்து வா‌ங்‌கி‌க் கொடு‌த்து ‌விடுவா‌ர்களோ?

Saturday, May 9, 2009

வீட்ல சமைச்சு சாப்பிடற மாதிரி வருமா?


என்ன நண்பர்களே! தலைப்பைப் பார்த்தவுடனே வீட்டு ஞாபகம் வருதா? இதைப் படிக்கிற முக்காவாசிப் பேரு வீட்டை விட்டு வெளியூருக்குப் போய்தான் வேலை பாத்துட்டு இருப்பீங்க, நானும் தான்.



சில பேருக்கு முன்னாடியே நல்லா சமைக்கத் தெரியும், அவங்க எங்க போனாலும் நல்ல ருசியா சமைச்சு சாப்பிட்ருவாங்க. நம்மள மாதிரி சுடு தண்ணி மட்டும் வைக்கத் தெரிந்தவர்கள் பாடு சொல்லி மாளாது. எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் கடைசியில் எப்படியோ அரைகுறையாகவாவது சமைக்க கற்றுக் கொள்வார்கள். அது வேற விஷயம். அதுவும் ஒரு குறிப்பிட்ட வகை தவிர வேற எதுவும் தெரியாமலிருக்கும்.

இதெல்லாம் விட சில வீடுகளில் மனைவிமார்கள் timetable போட்டு சமைப்பார்கள், ஒரு ஐந்தாறு அயிட்டங்களை திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பார்கள்.

நம்ம எல்லாருக்கும் ஒரு வரப்பிரசாதமா ஒரு மிகவும் பயனுள்ள தளம் கண்டேன்.
அதுதான் அறுசுவை. எல்லா சமையலும் எப்படி பண்றதுண்ணு படிப்படியா சொல்லியிருக்காங்க.

காலைல ஏதாச்சும் சிற்றுண்டி பண்ணணுமா? அது கூட தொட்டுக்கிற சட்னி பண்ணணுமா? மதியம் என்னல்லாம் பண்ணலாம்? சாயுங்காலம் நொறுக்குத்தீனி வகைகள், இரவு உணவு வகைகள், சைவம், அசைவம், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சமையல் வகைகள், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி , ஏன் ஒவ்வொரு நாட்டுக்கும் பலப்பல வகைகள்னு இங்க இல்லாத அயிட்டமே கிடையாதுன்னு சொல்லலாம்.

அது இல்லாம ஒவ்வொரு உணவுக்கும், என்ன சத்து இருக்குன்னு சொல்றாங்க. ஆரோக்கியமா வாழ்றதுக்கு என்ன உணவு சாப்பிடலாம்னு ஆலோசனை தர்றாங்க. மொத்ததில் இந்த தளத்தின் பெருமையை சொல்ல இன்னும் பத்து பதிவுகள் எழுதினாலும் போதாது. நான் சொன்ன விஷயங்களை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் இந்த தளம். சென்று பாருங்கள். பின்னூட்டமிடுங்கள்.

அரை சாண் வயித்துக்குதான இவ்ளோ அல்லோலப் பட்டுட்டு இருக்கோம். சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ருசியாக சமைத்துச் சாப்பிடுங்கள்!

சைவ சிற்றுண்டி வகைகள்
இட்லி இடியாப்பம்
உப்புமா சர்க்கரை பொங்கல்
தோசை போண்டா
ரவா தோசை கோதுமை தோசை
ரவா கேசரி வெண் பொங்கல்
புதினா சப்பாத்தி சேமியா பொங்கல்
இனிப்பு கோதுமை அடை கோதுமை மாவு உறைப்படை
ஸ்பெஷல் பரோட்டா தானிய சுண்டல்
குருமா வகைகள்
உருளைக்கிழங்கு குருமா பூரி குர்மா
வெஜிடபிள் குருமா காலிப்ளவர் மசாலா
கொண்டைக்கடலை மசாலா
சட்னி வகைகள்
இனிப்பு சட்னி கொத்தமல்லிச் சட்னி
தக்காளிச் சட்னி தேங்காய்ச் சட்னி
வெங்காயச் சட்னி இஞ்சி சட்னி
நிலக்கடலை சட்னி விளாங்காய்ச் சட்னி
துவையல் வகைகள்
தேங்காய்த் துவையல் கறிவேப்பிலைத் துவையல்
வெங்காயத் துவையல் கத்தரிக்காய் துவையல்
சாத வகைகள்
எலுமிச்சம்பழச் சாதம் கல்கண்டு சாதம்
தயிர் சாதம் புளியோதரை
முட்டைகோசு சாதம் சேமியா பாயசம்
கத்திரிக்காய் சாதம்
பொரியல் வகைகள்
உருளைக்கிழங்கு பொரியல் பச்சைப்பயிர் பொரியல்
பறங்கிக்காய் பொரியல் புடலங்காய்ப் பொரியல்
முட்டைகோசுப் பொரியல் உருளை பசலைப் பொரியல்
முந்திரிப் பச்சடி
குழம்பு ரசம் வகைகள்
சாம்பார் உருளைக்கிழங்கு குழம்பு
தக்காளி குழம்பு மாம்பழ மோர்க்குழம்பு
வெந்தயக் குழம்பு காலிஃப்ளவர் குருமா
துளசி ரசம் பன்னீர் ரசம்
பைனாப்பிள் ரசம்


அசைவ சமையல்

முட்டை
உருளைக்கிழங்கு முட்டைக் குழம்பு முட்டை கபாப்
அவித்த ஆம்லெட் நூடுல்ஸ் அடை
ஆட்டிறைச்சி
கறி குருமா கறிக்குழம்பு
மட்டன் சாப்ஸ் கறி கோலா
மட்டன் கட்லெட் ஆட்டு எலும்பு சூப்
கறி வதக்கல் உப்பு கறி
கறி பப்ஸ் மட்டன் உருண்டை கறி
மட்டன் பிரட் ப்ரை கொத்துக்கறி கயிறு கட்டி கோலா
கோழி இறைச்சி
கோழி வறுவல் சிக்கன் கட்லெட்
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சிக்கன் மிளகு சாப்ஸ்
கோழிக்கறிக் குழம்பு கோழிக் குழம்பு - 2
சிக்கன் சம்மா சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்
சிக்கன் பக்கோடா கோழி ரோஸ்ட்
சிக்கன் மக்கானி கோழிக்கறி சமோசா
வறுத்த கோழி மக்ரூன்னி
கோழி தக்காளி சூப் கேரளா கோழி சூப்
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ஹாட் அண்ட் ஸோர் சிக்கன் சூப்
சிக்கன் நெய்சோறு சிக்கன் பிரியாணி
சிக்கன் ப்ரைடு ரைஸ் சிக்கன் 65
நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் பெப்பர் சிக்கன்
கோழி கொத்துக்கறி கோழிக்கறி பிரட்டல்
சில்லி சிக்கன் முட்டை தடவிய சிக்கன்
முட்டை உள் கோழிக்கறி பெங்களூர் சிக்கன்
சைனீஸ் சிக்கன் பிரை டெல்லி சிக்கன் ப்ரை
சிலோன் சிக்கன் ப்ரை ரோகினி சிக்கன்
கொங்கு கோழி வறுவல் தந்தூரி சிக்கன்
சிக்கன் டிக்கா மலாய் சிக்கன்
கஸ்தூரி கபாப் ரேஸ்மி கபாப்
கோழி உப்புக்கறி ப்ரைடு சிக்கன்
சிங்கப்பூர் சிக்கன் வறுவல் டாங்டி கபாப்
சிக்கன் சாட்டே செட்டிநாடு கோழி வறுவல்
பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா சைனீஸ் சில்லி சிக்கன்
சோளச்சீவல் கோழி வறுவல் சிக்கன் ஷெரின்
சிக்கன் அக்பரா தாஜ் சிக்கன் குருமா
சிக்கன் நவாபி மொஹல் சிக்கன்
ஷாஜகானி சிக்கன் மசாலா மொஹல் சிக்கன் கபாப்
ஷஹான்ஷாஹி சிக்கன் சிக்கன் தர்பாரி
சிக்கன் குருமா தேங்காய் கோழிக்கறி
கோழி-வெள்ளைக் குழம்பு கோழி இறைச்சிப் பிரட்டல்
கோழி மசாலா மதராஸ் சிக்கன்
சிக்கன் விந்தாரி சிக்கன் முசல்லாம்
தக்காளி கோழி மும்பை மசாலா சிக்கன்
கோவா சிக்கன் கறி கோழி உருளைக் குழம்பு
கோழி கொத்தமல்லி மசாலா பஞ்சாபி சிக்கன்
பட்டர் சிக்கன் பாதாம் சிக்கன்
பிஸ்தா சிக்கன் லெமன் சிக்கன்
முந்திரி சிக்கன் சிக்கன் மஞ்சூரியன்
செட்டிநாடு சிக்கன் சிக்கன் கீமா புலாவ்
பாக்தாத் சிக்கன்
மீன்
மீன் குழம்பு மீன் கபாப்
கொடுவா மீன் வறுவல் மீன் ரோஸ்ட்
பொரித்த மீன் குழம்பு
நண்டு
நண்டு குருமா சில்லி நண்டு (சைனீஸ் முறை)
இறால்
எறால் மீன் கறி இறால் ஊறுகாய்
இறால் குருமா
இதர இறைச்சிகள்
புறாக் குஞ்சு ரோஸ்ட்
கோழி - சில தகவல்கள்
கோழி இறைச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
கோழியை விரயம் செய்யாமல் நறுக்குவது எப்படி?


இந்தத் தளத்தைப் பார்த்தா நம்மள மாதிரி ஆளுகளுக்கும் சமைத்து சாப்பிட ஆசை வரும் :)

Wednesday, May 6, 2009

Youthful விகடனுக்கு நன்றி

நச்சுனு ஒரு பதிவு எழுதுனா நாலு பேரு பாராட்டுவாங்கங்கிறது சரியாதான் இருக்கு. நம்ம பதிவும் விகடன்ல வந்துருச்சுல்ல!!! நல்லா பார்த்துக்கோங்க நல்லா பார்த்துக்கோங்க...


பின்னூக்கம் தந்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பல.

Monday, May 4, 2009

புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது!!!


புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது எனும் அளவுக்கு கூட வாதாடுவார்கள் இந்த புகைக்கு அடிமையானவர்கள். என் நண்பர் ஒருவரை புகையை கட்டுப்படுத்த வைத்துவிடலாம் என்று பல முயற்சிகளின் எடுத்தும் நாங்கள் தான் தோல்வியுறுகிறோம். இந்தப் பதிவு அவருக்கே சமர்ப்பணம்.


புகைக்கு அடிமையாதல் என்றால் என்ன?

ஒருவர் புகைக்கு அடிமையாகி விட்டார் என்றால் அவர் புகைக்க எண்ணும் போது புகைக்கா விட்டால் அவர் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாவார், மனதளவிலும் மற்றும் உடலளவிலும்.

புகைப்பிடித்தல் கெடுதல் தரக்கூடியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அது எவ்வளவு விஷமானது என்றும் அடிமையாக்கதக்கது என்றும் பலர் உணர்வதில்லை.

புகைக்கு அடிமையானவர் ஒருவர் தனது 50-ஆவது வயதில் மரணமடைகிறார் என்றால் அவர் அநேகமாக இன்னும் 10 முதல் 15 வருடங்கள் வரை கூடுதலாக வாழ்திருப்பாராம் இந்தப் புகையை விட்டொழித்திருந்தால் .

புகைக்கு அடிமையானால் மீள முடியாது என்பது வெறும் மாயை, சற்று கடினம் என்று சொல்லலாம். தானாக முயன்றாலன்றி வற்புறுத்தல் வேலைக்கு ஆகாது.

35-50 வயதுக்குள்ளாக அல்லது அதற்கு முன்பாக புகையை விட்டொழித்தால், நுரையீரல் பாதிப்பிலிருந்து 90% வரை தப்பிக்க வழியுண்டு.

ஏன் புகைக்கு அடிமையாகிறார்கள்:

புகையிலையில் உள்ள நிக்கோடின் என்ற வேதியியல் பொருள்தான் அவர்களை அடிமையாக்குகிறது. புகையை வாயின் வழியாக அல்லது மூக்கின் வழியாக(passive smokers பாதிக்கப்படுவது இப்படித்தான்!!!) உள்ளிழுக்கும் பொழுது அல்லது புகையிலையை மெல்லும் போது இந்த நிக்கோடின் நம் ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைகிறது. இந்த நிக்கோடின் நம் மூளைக்கு ஒரு விதமான தூண்டுதலைக் கொடுக்கும். நாம் stress-ஆக இருந்தால் இது அமைதிப்படுத்தியாகவும் வேலை செய்யும். இது நம் ஹார்மோன்களைக் கூட பாதிக்குமாம். நிக்கோடின் நம் மூளையில் பல pleasure centers-களை உருவாக்கும். அது தன் வலுவை இழக்கும் போது புகைப் பிடிக்க ஆர்வம் அதிகரிக்கும். இதுவும் ஒரு விதமான பசி.

ஒருவர் தன் பருவ வயதில் எவ்வளவு சீக்கிரம் புகைப்பிடிக்க ஆரம்பிக்கிறாரோ அவ்வளவு அடிமையாகிறாராம் இந்த பாழாப்போன புகைக்கு.

புகைத்தலினால் வரும் நோய்கள்:

  • இதயம் சம்பந்தமான நோய்கள்
  • பலவிதமான புற்று நோய்கள்
  • நுரையீரல் சம்பந்த்தமான பல நோய்கள்
  • வயிற்றுப்புண்(Ulcer) ஆறுவதை தாமதப்படுத்துகிறது
  • ரத்தக்குழாய்கள் பாதிக்கப் படுவதினால் கால் முடமாகும் வாய்ப்பு
  • தோல் சுருக்கம் (ஐந்து வயது முதுமையாகத் தெரிவார்களாம்.)
  • ஆண் பெண் இன உருப்புகளை பாதிக்கும்.
  • எலும்புகளை சீக்கிரம் வலுவிழக்கச் செய்யும்.
  • பெண்களுக்கு பிரசவம் தொடர்பான பல பிரச்சனைகளைத் தருகிறது.

புகைத்தல் பற்றி ஒரு சலனப்படம்:


புகைத்தலை எப்படி நிறுத்துவது?

நல்ல தளம் கண்டேன். இங்கே சென்று பாருங்கள். எப்படி புகைத்தலை நிறுத்துவது என்று படிப்படியாக விளக்கமாக கூறியிருக்கிறார்கள். நீங்கள் புகைக்கவில்லை என்றாலும் இங்கே போய்ப் பாருங்கள். உங்கள் நண்பர் யாராவது "புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது" எனும் அளவுக்கு வாதாடினால் இந்த தகவல்களை அள்ளி வீசுங்கள். அவருக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.

இந்தப் பதிவு என்னைப் போன்ற பல கோடிக்கணக்கான passive smokers-களுக்கும் சமர்ப்பணம்.

உங்கள் அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல புரட்சிக்கு வித்திடட்டும் இந்தப் பதிவு!!!

சோமாலியா கடற்கொள்ளையர்கள்


சமீபகாலமாக அரபிக் கடல் பகுதியில் ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவது அதிகரித்து விட்டது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தான் சர்வதேச அளவில் இப்போது பரபரப்பான செய்தி. இந்திய கடற்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி, கடற் கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்த செய்தி வெளியான பின், அலுவலகம் முதல் டீ கடை வரை இதுபற்றிய விவாதங்கள் தான் சூடு பறக்கின்றன. கடற்கொள்ளை பற்றியும், அதன் பின்னணி குறித்தும் பல முக்கியமான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன.

நிலையான அரசு இல்லை:
கடற்கொள்ளையர்கள் வசிக்கும் சோமாலியாவில் கடந்த 1991ல் இருந்து முறையான தேசிய அரசு எதுவும் இல்லை. "தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்ற ரீதியில், ஆயுதம் வைத்திருப்பவர்களின் ராஜ்யம் தான் இங்கு கொடி கட்டி பறக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமான கும்பல்கள், கப்பல்களையும், ஆயுதங்களையும் வாங்கி குவித்துள்ளன. இதை வைத்துக் கொண்டு ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல்களை தாக்கி, மிரட்டி கடத்தி வருகின்றனர்.மிகப்பெரிய தொகையை பிணையத் தொகையாக பெற்று, சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். சோமாலியாவின் பிரதான தொழிலே கடற்கொள்ளை தான்.

பிசி'யான பகுதி:
கடற் கொள்ளையர்களுக்கு மற்றொரு சாதகமான விஷயமும் உள்ளது. ஏடன் வளைகுடா பகுதி தான், உலகிலேயே மிகவும் "பிசி'யான கப்பல் போக்குவரத்து நடக்கும் பகுதி. இந்திய பெருங்கடலையும், செங்கடலையும் இணைக்கும் பகுதி என்பதால், ஏராளமான சரக்கு கப்பல்கள், தினமும் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதி வழியாக தினமும் குறைந்தது ஒரு இந்தியக் கப்பலாவது செல்வது வழக்கம். இவற்றில் பெரும்பாலானவை எண்ணெய் பொருட்களை ஏற்றிச் செல்பவை.

இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு ஏன்?:
கப்பல் கடத்தல் பற்றிய செய்திகள் வெளியாகும் போதெல்லாம் அதில் இந்தியர்கள் தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிய வருகிறது. இதற்கு காரணம், கப்பல் துறை பற்றிய பயிற்சி பெற்றுள்ள இந்தியர்களுக்கு சர்வதேச அளவில் அதிக கிராக்கி உள்ளது. அதிகமான சம்பளம் கிடைப்பதாலும், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சரக்கு கப்பல்களில் இந்தியர்களே அதிகம் பணி புரிகின்றனர். சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம். இது தவிர, சரக்கு ஏற்றுபவர், சுத்தம் செய்பவர் என்று தொழிலாளர் மட்டத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இதனால், கப்பல் கடத்தப்படும் போதெல்லாம், அதில் இந்தியர்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "இந்தியாவில் கப்பல் போக்குவரத்து குறித்து பயிற்சி பெற்றவர்களுக்கும், அது தொடர் பான கல்வி கற்றோருக்கும் சர்வதேச அளவில் நல்ல மதிப்பு உள்ளது. இந்தியர்கள் திறமையாக பணியாற்றுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது' என்றன.

கொள்ளையர்களை பிடிப்பதில் பிரச்னை:
சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிப்பதற்கும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் ஏராளமான இடையூறுகள் உள்ளன. அனைத்து நாடுகளும் கடற் கொள்ளையர் ஒழிப்பு முயற்சியில் சாதாரணமாக இறங்கி விட முடியாது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், "சோமாலியாவில் அரசு மாற்றத்துக்கு உதவிய நாடுகளுக்கு மட்டுமே, அதன் கடல் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல நாடுகள் கடற் கொள்ளை தடுப்புப் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கடற் கொள்ளையர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டே செல்கின்றனர்.

ஆபத்துக்கு உதவுவதில் சிரமம்:
ஏடன் வளைகுடாவில் யேமன் கடல் எல்லையில் இருந்து, சோமாலியா வரை உள்ள 950 கி.மீ., தூர பகுதிகளில் தான் கடல் கொள்ளை ஜாம் ஜாம் என நடக்கிறது. இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் பொறுப்பு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த மேற்கத்திய கடல் கண்காணிப்பு குழுமத்திடம் உள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இங்கு வேறுநாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் கடத்தப்படும் போது, மேற்கண்ட நாடுகளின் போர்க் கப்பல்களிடம் இருந்து உதவி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என்கிறார், இந்திய கப்பல் கழகத் தலைவர் ஹஜாரா.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியக் கப்பல்கள் கடத்தப் படும் சூழ்நிலை ஏற்படும்போது, கப்பலின் கேப்டன் உடனடியாக அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு தகவல் தெரிவிப்பார். ஆனால், அவர்கள், "எந்த நாட்டு கப்பல், கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது, கப்பலில் இருப்பவர் கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்'என அடுக்கடுக்காக கேள்வி கேட்பர். இந்திய கப்பல் எனக் கூறினால், "உடனடியாக உங்களுக்கு உதவமுடியாது' என தெரிவித்து விடுவர். இந்த கால அவகாசத்தை பயன் படுத்தி கடற் கொள்ளையர்கள் கப்பலை கடத்திச் சென்று விடுவர். இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, ஐ.நா., தலைமையில் அமைதிப்படை ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரை இதில் ஒருங்கிணைத்து கடற் கொள்ளையை தடுக்க வேண்டும். சர்வதேச கப்பல் போக்குவரத்து கழக கூட்டத்தில் இதுபற்றி இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஹஜாரா கூறினார்.

அமெரிக்காவும் வலியுறுத்தல்:
தொடரும் கடற் கொள்ளை விவகாரம் பற்றி அமெரிக் காவும் தனது கவலையை தெரிவித்துள் ளது. அமெரிக்க கடற்படை அதிகாரி மைக் முல்லேன் இதுபற்றி கூறுகையில், "சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிக்கும் விவகாரத்தில் பல குழப்பமான சட்ட விதிமுறைகள் உள்ளன. எனவே, கடற் கொள்ளையை தடுத்து, கொள்ளையர்களை தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதுகுறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வலியுறுத்த உள்ளது. அனைத்து நாடுகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

சவுதி கப்பலுக்கு நூறு கோடி:
கடற் கொள்ளையை தடுக்க சர்வதேச நாடுகள் எந்த அளவுக்கு தீவிரமாக களத்தில் இறங்கினாலும், கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் சிறிதளவும் குறையவில்லை. தொடர்ந்து தங்கள் வேலையை அவர்கள் செய்து கொண்டுள்ளனர். தற்போது கூட "சீரியஸ் ஸ்டார்' என்ற சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலை அவர்கள் கடத்தி, தங்கள் பிடியில் வைத்துள்ளனர். இந்த கப்பலில் 20 லட்சம் பேரல் எண்ணெய் உள்ளது. கப்பல் ஊழியர்களும் கொள்ளையர்களின் பிடியில் உள்ளனர். இந்த கப்பலை விடு விக்க வேண்டுமெனில், "நூறுகோடி ரூபாய் வேண்டும்' என கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கடற் கொள்ளையர் களில் ஒருவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒருவர், தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சவுதியைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 10 நாட்களுக்குள் நூறு கோடி ரூபாய் தந்தால் கப்பலை விடுவிப்போம்' என கூறியுள்ளார்.

ஜப்பான் கப்பலுக்கு எவ்வளவு?:
கடந்த செப்டம்பர் மாதம் "ஸ்டால்ட் வாலோர்' என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் இருந்த ஊழியர்களில், கப்பல் கேப்டன் உட்பட 18 பேர் இந்தியர்கள். கப்பலையும், ஊழியர்களையும் விடுவிக்க ஜப்பான் நிறுவனத்தோடு, கடற் கொள்ளையர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் பேச்சு நடத்தினர். கடந்த வாரம் பெரும் தொகை கைமாறியதைத் தொடர்ந்து, கப்பலையும், ஊழியர்களையும் கொள்ளையர்கள் விடுவித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை. கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
*இந்திய கடற்படைக்கு சுதந்திரம்:* கடற் கொள்ளையர்களின் கப்பலை, இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்., தபார், சமீபத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி கடலுக்குள் மூழ்கடித்தது. இதையடுத்து, இந்திய கடற்படைக்கு, ஏடன் வளைகுடா பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு சிறிதளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய கடற்படை கப்பல் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் மேலும் 12 கடல் மைல் தொலைவுக்கு தனது கண்காணிப்பு பணியை நீட்டிக்க முடியும்.

பிரச்னைக்கு தீர்வு என்ன?: சோமாலியா கடற் கொள்ளையர்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக, சமீபத்தில் தான் சர்வதேச நாடுகள் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஐ.நா., தலைமையில் பல்வேறு நாடுகளின் கடற்படையினர் அடங்கிய ஒருங்கிணைந்த படைப் பிரிவு, நிரந்தர பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கூடுதல் போர்க் கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும். கடத்தப்படுவது எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் சரி, உடனடியாக அதை மீட்கும் முயற்சியில் களம் இறங்க வேண்டும். சட்ட விதிமுறைகளை சுட்டிக் காட்டி, மீட்புப் பணியை தாமதப்படுத்துவது சரியாக இருக்காது. கடற் கொள்ளையர்களை பிடித்து, தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை ஐ.நா.,வும், சர்வதேச சமுதாயமும் உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆச்சரியத்தில் திளைக்கும் சோமாலிய மக்கள்:
கடற் கொள்ளையர்களின் புண்ணியத்தில் சோமாலியாவின் சின்னஞ் சிறு கிராமங்களில் கூட சர்வ சாதாரணமாக கரன்சிகள் புழங்க துவங்கியுள்ளன. சிறிய நகரங்களில் கூட, காபி ஷாப், இன்டர்நெட் கபே, ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடத்தப்படும் கப்பல்களை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் பெறுவதால், கொள்ளையர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வாரி இறைக்கின்றனர். பல ஆண்டுகளாக உள்நாட்டு கலவரத்தாலும், முறையான அரசும் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் சோமாலியா மக்கள், இந்த காட்சிகளை ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்க்கின்றனர்.

கொள்ளையர்களுக்கு செம வாழ்வு தான்:
கப்பல் நிறுவனங்களை மிரட்டி பறித்த பணத்தையெல்லாம், தங்கள் மனம் போன போக்கில் செலவழிக் கின்றனர் கடற்கொள்ளையர்கள். விலை உயர்ந்த கற்களால் கட்டப் பட்ட சொகுசு பங்களாக்களை கட்டுவது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆடம்பர கார்கள் வாங்குவது ஆகியவை இவர்களது பொழுதுபோக்கு ஆகிவிட்டன. அழகான பெண்களை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வரும் இவர்கள், சாப்பாட்டிலும் குறை வைக்கவில்லை. மேற்கத் திய உணவு வகைகளை சமைப்பதற்காக, பிரத்யேகமான சமையல்காரர்களையும் வேலைக்கு வைத்துள்ளனர். எல்லாம், பணம் படுத்தும் பாடு.

நன்றி தினமலர்.

மரணத்திற்கு பிறகு உங்கள் online account-களின் நிலைமை!!!

நண்பர்களே! அபசகுணமாக ஆரம்பிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்.

நம்ம ஒரு உயிலை ஏற்பாடு செய்தால் நம்ம மரணத்திற்குப் பிறகு நம்ம சொத்து பத்து எல்லாம் நம்ம அன்புடையீர்களுக்கு அளிக்கப்படும். நம்ம எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கோமா, நம்ம cyper accouts-க்கு என்ன கதின்னு? அதான்… email-id, social networking profiles, online bank accounts and invesment accounts!!!

கவலைய விடுங்க! இப்போ புதுசா ஒரு online பாதுகாப்பு பெட்டகம் வந்திருக்கு. அதான் Legacy Locker.

எப்படி?

அதாவது, நம்ம பலதரப்பட்ட online சொத்துக்களைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு (அதான் PC logins, Web domains, accounts with Twitter, Facebook, LinkedIn, eBay, Flickr, iTunes, Quicken etc.), எல்லா username மற்றும் password கொடுத்திரணும். ஒவ்வொரு சொத்துக்கும் ஒரு beneficiery-ய (beneficiery-ய யாராச்சும் தமிழ்ப் படுத்த முடியுமான்னு பாருங்களேன்) நியமிச்சிரணும்.

அது கூட, ரெண்டு verifiers-அ நியமிக்கணும். verifiers குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய நண்பர்களோ இல்ல attorneys-ஆவோ இருக்கலாம். இந்த verifiers தான் உங்கள் இறப்பு பற்றி Legacy Locker-க்கு தெரியப் படுத்தணும். ரெண்டு verifiers-உமே இறப்பை உறுதிப் படுத்தணும். இந்த மாதிரி தெரிவிக்கறப்போ இறப்புச் சான்றிதழ் கண்டிப்பா வேணும்.

உறுதிப் படுத்தியவுடன், Legacy Locker beneficieries மக்களை தொடர்பு கொள்ளும். அந்த beneficiaries அவங்க identity-அ உறுதிப் படுத்தணும். இந்த மாதிரி பல பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுகிறது.

Legacy Locker பாதுகாப்பு வங்கிக் கணக்கு பாதுகாப்பை விட பல மடங்கு மிஞ்சுமாம்!

அதோட, நம்ம beneficieries-க்கு நம்ம அனுப்ப நெனைக்கிற அஞ்சலையும் (அஞ்சல்-னா mail, பொண்ணு இல்ல :)) சேமிச்சு வச்சுக்கலாம். பின் வரும் நாட்களில், நம்ம வீடியோ கூட சேமிச்சு வக்கலாமாம்!

எல்லாம் சரி தான், எவ்ளோ காசுன்னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது. இலவசம்!!! ஆனா மூணு online சொத்துக்கள், ஒரு beneficiery மற்றும் ஒரு அஞ்சல் மட்டும் தான் வச்சுக்க முடியும். அதுக்கு மேல வேணும்னா 30$/வருஷம் அல்லது 300$/வாழ்நாள் முழுதும். (ரொம்ப அதிகம் தான்).

இதைப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு பின்னூட்டமிடுங்க.

மாற்றம்

நண்பர்களே, Word Press Blogஐ நிர்வாகிப்பதில் மிகுந்த சிரமப்பட்டு விட்டதால் கடைசியாக Bloggerக்கே வந்து விட்டேன்.

உங்கள் ஆதரவு தொடர நன்றி பல...