Saturday, May 9, 2009

வீட்ல சமைச்சு சாப்பிடற மாதிரி வருமா?


என்ன நண்பர்களே! தலைப்பைப் பார்த்தவுடனே வீட்டு ஞாபகம் வருதா? இதைப் படிக்கிற முக்காவாசிப் பேரு வீட்டை விட்டு வெளியூருக்குப் போய்தான் வேலை பாத்துட்டு இருப்பீங்க, நானும் தான்.



சில பேருக்கு முன்னாடியே நல்லா சமைக்கத் தெரியும், அவங்க எங்க போனாலும் நல்ல ருசியா சமைச்சு சாப்பிட்ருவாங்க. நம்மள மாதிரி சுடு தண்ணி மட்டும் வைக்கத் தெரிந்தவர்கள் பாடு சொல்லி மாளாது. எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் கடைசியில் எப்படியோ அரைகுறையாகவாவது சமைக்க கற்றுக் கொள்வார்கள். அது வேற விஷயம். அதுவும் ஒரு குறிப்பிட்ட வகை தவிர வேற எதுவும் தெரியாமலிருக்கும்.

இதெல்லாம் விட சில வீடுகளில் மனைவிமார்கள் timetable போட்டு சமைப்பார்கள், ஒரு ஐந்தாறு அயிட்டங்களை திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பார்கள்.

நம்ம எல்லாருக்கும் ஒரு வரப்பிரசாதமா ஒரு மிகவும் பயனுள்ள தளம் கண்டேன்.
அதுதான் அறுசுவை. எல்லா சமையலும் எப்படி பண்றதுண்ணு படிப்படியா சொல்லியிருக்காங்க.

காலைல ஏதாச்சும் சிற்றுண்டி பண்ணணுமா? அது கூட தொட்டுக்கிற சட்னி பண்ணணுமா? மதியம் என்னல்லாம் பண்ணலாம்? சாயுங்காலம் நொறுக்குத்தீனி வகைகள், இரவு உணவு வகைகள், சைவம், அசைவம், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சமையல் வகைகள், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி , ஏன் ஒவ்வொரு நாட்டுக்கும் பலப்பல வகைகள்னு இங்க இல்லாத அயிட்டமே கிடையாதுன்னு சொல்லலாம்.

அது இல்லாம ஒவ்வொரு உணவுக்கும், என்ன சத்து இருக்குன்னு சொல்றாங்க. ஆரோக்கியமா வாழ்றதுக்கு என்ன உணவு சாப்பிடலாம்னு ஆலோசனை தர்றாங்க. மொத்ததில் இந்த தளத்தின் பெருமையை சொல்ல இன்னும் பத்து பதிவுகள் எழுதினாலும் போதாது. நான் சொன்ன விஷயங்களை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் இந்த தளம். சென்று பாருங்கள். பின்னூட்டமிடுங்கள்.

அரை சாண் வயித்துக்குதான இவ்ளோ அல்லோலப் பட்டுட்டு இருக்கோம். சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ருசியாக சமைத்துச் சாப்பிடுங்கள்!

சைவ சிற்றுண்டி வகைகள்
இட்லி இடியாப்பம்
உப்புமா சர்க்கரை பொங்கல்
தோசை போண்டா
ரவா தோசை கோதுமை தோசை
ரவா கேசரி வெண் பொங்கல்
புதினா சப்பாத்தி சேமியா பொங்கல்
இனிப்பு கோதுமை அடை கோதுமை மாவு உறைப்படை
ஸ்பெஷல் பரோட்டா தானிய சுண்டல்
குருமா வகைகள்
உருளைக்கிழங்கு குருமா பூரி குர்மா
வெஜிடபிள் குருமா காலிப்ளவர் மசாலா
கொண்டைக்கடலை மசாலா
சட்னி வகைகள்
இனிப்பு சட்னி கொத்தமல்லிச் சட்னி
தக்காளிச் சட்னி தேங்காய்ச் சட்னி
வெங்காயச் சட்னி இஞ்சி சட்னி
நிலக்கடலை சட்னி விளாங்காய்ச் சட்னி
துவையல் வகைகள்
தேங்காய்த் துவையல் கறிவேப்பிலைத் துவையல்
வெங்காயத் துவையல் கத்தரிக்காய் துவையல்
சாத வகைகள்
எலுமிச்சம்பழச் சாதம் கல்கண்டு சாதம்
தயிர் சாதம் புளியோதரை
முட்டைகோசு சாதம் சேமியா பாயசம்
கத்திரிக்காய் சாதம்
பொரியல் வகைகள்
உருளைக்கிழங்கு பொரியல் பச்சைப்பயிர் பொரியல்
பறங்கிக்காய் பொரியல் புடலங்காய்ப் பொரியல்
முட்டைகோசுப் பொரியல் உருளை பசலைப் பொரியல்
முந்திரிப் பச்சடி
குழம்பு ரசம் வகைகள்
சாம்பார் உருளைக்கிழங்கு குழம்பு
தக்காளி குழம்பு மாம்பழ மோர்க்குழம்பு
வெந்தயக் குழம்பு காலிஃப்ளவர் குருமா
துளசி ரசம் பன்னீர் ரசம்
பைனாப்பிள் ரசம்


அசைவ சமையல்

முட்டை
உருளைக்கிழங்கு முட்டைக் குழம்பு முட்டை கபாப்
அவித்த ஆம்லெட் நூடுல்ஸ் அடை
ஆட்டிறைச்சி
கறி குருமா கறிக்குழம்பு
மட்டன் சாப்ஸ் கறி கோலா
மட்டன் கட்லெட் ஆட்டு எலும்பு சூப்
கறி வதக்கல் உப்பு கறி
கறி பப்ஸ் மட்டன் உருண்டை கறி
மட்டன் பிரட் ப்ரை கொத்துக்கறி கயிறு கட்டி கோலா
கோழி இறைச்சி
கோழி வறுவல் சிக்கன் கட்லெட்
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சிக்கன் மிளகு சாப்ஸ்
கோழிக்கறிக் குழம்பு கோழிக் குழம்பு - 2
சிக்கன் சம்மா சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்
சிக்கன் பக்கோடா கோழி ரோஸ்ட்
சிக்கன் மக்கானி கோழிக்கறி சமோசா
வறுத்த கோழி மக்ரூன்னி
கோழி தக்காளி சூப் கேரளா கோழி சூப்
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ஹாட் அண்ட் ஸோர் சிக்கன் சூப்
சிக்கன் நெய்சோறு சிக்கன் பிரியாணி
சிக்கன் ப்ரைடு ரைஸ் சிக்கன் 65
நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் பெப்பர் சிக்கன்
கோழி கொத்துக்கறி கோழிக்கறி பிரட்டல்
சில்லி சிக்கன் முட்டை தடவிய சிக்கன்
முட்டை உள் கோழிக்கறி பெங்களூர் சிக்கன்
சைனீஸ் சிக்கன் பிரை டெல்லி சிக்கன் ப்ரை
சிலோன் சிக்கன் ப்ரை ரோகினி சிக்கன்
கொங்கு கோழி வறுவல் தந்தூரி சிக்கன்
சிக்கன் டிக்கா மலாய் சிக்கன்
கஸ்தூரி கபாப் ரேஸ்மி கபாப்
கோழி உப்புக்கறி ப்ரைடு சிக்கன்
சிங்கப்பூர் சிக்கன் வறுவல் டாங்டி கபாப்
சிக்கன் சாட்டே செட்டிநாடு கோழி வறுவல்
பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா சைனீஸ் சில்லி சிக்கன்
சோளச்சீவல் கோழி வறுவல் சிக்கன் ஷெரின்
சிக்கன் அக்பரா தாஜ் சிக்கன் குருமா
சிக்கன் நவாபி மொஹல் சிக்கன்
ஷாஜகானி சிக்கன் மசாலா மொஹல் சிக்கன் கபாப்
ஷஹான்ஷாஹி சிக்கன் சிக்கன் தர்பாரி
சிக்கன் குருமா தேங்காய் கோழிக்கறி
கோழி-வெள்ளைக் குழம்பு கோழி இறைச்சிப் பிரட்டல்
கோழி மசாலா மதராஸ் சிக்கன்
சிக்கன் விந்தாரி சிக்கன் முசல்லாம்
தக்காளி கோழி மும்பை மசாலா சிக்கன்
கோவா சிக்கன் கறி கோழி உருளைக் குழம்பு
கோழி கொத்தமல்லி மசாலா பஞ்சாபி சிக்கன்
பட்டர் சிக்கன் பாதாம் சிக்கன்
பிஸ்தா சிக்கன் லெமன் சிக்கன்
முந்திரி சிக்கன் சிக்கன் மஞ்சூரியன்
செட்டிநாடு சிக்கன் சிக்கன் கீமா புலாவ்
பாக்தாத் சிக்கன்
மீன்
மீன் குழம்பு மீன் கபாப்
கொடுவா மீன் வறுவல் மீன் ரோஸ்ட்
பொரித்த மீன் குழம்பு
நண்டு
நண்டு குருமா சில்லி நண்டு (சைனீஸ் முறை)
இறால்
எறால் மீன் கறி இறால் ஊறுகாய்
இறால் குருமா
இதர இறைச்சிகள்
புறாக் குஞ்சு ரோஸ்ட்
கோழி - சில தகவல்கள்
கோழி இறைச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
கோழியை விரயம் செய்யாமல் நறுக்குவது எப்படி?


இந்தத் தளத்தைப் பார்த்தா நம்மள மாதிரி ஆளுகளுக்கும் சமைத்து சாப்பிட ஆசை வரும் :)

7 comments:

KRICONS said...

Template நல்லா இருக்கு,

எப்ப சமையல் மாஸ்டர் ஆனேங்க...

உங்களை மாதிரி ஆளுங்களுக்குதான் விகடன்ல கூட ஒரு தொடர் வறுது.

KRICONS said...

இலவச சந்தா பெற இடத்தில் Subscribe என்பது வெள்ளை நிறத்தில் உள்ளதால் சரியாக தெரியவில்லை

Anand said...

KRICONS நண்பா, சமையல் மாஸ்டர் ஆறதுக்கு முதல் படி எடுத்து வைத்திருக்கேன் :) பொழுது போகலேன்னா சமைக்கலாம்ல.

சந்தாவைச் சரி செய்து விட்டேன் நண்பா, நன்றி. இதையும் உங்க உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பதிவுல சேர்த்துக்கோங்க.

Tech Shankar said...

s u p e r. I will try it for tomorrow's lunch.

t h a n k s

Tech Shankar said...


சமையல் கலைக்கான வீடியோக்கள் தொகுப்பு (ஆண்களுக்கானது)
முடிந்தால் இந்தப் பதிவையும் பார்க்கவும்.

நன்றி. ஆண்களுக்கான சமையல் - சுரேஷ்குமாரின் வீடியோக்கள்

Tech Shankar said...

நான் இந்த தளத்தை எனது அமெரிக்க நண்பர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

Anand said...

பின்னூக்கத்திற்கு நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே.

இந்தத் தளத்தைப் பார்த்து சமையல் செய்து அது ருசியாக இல்லை என்றால் நான் பொறுப்பில்லையப்பா :)

// சமையல் கலைக்கான வீடியோக்கள் தொகுப்பு // அசத்தலான பதிவு.